Skip to main content

Posts

Showing posts from September, 2010

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே சமயம்

தொழில்.

காணக் கிடைக்காத தேசம் ஒன்று போய் , இங்கே காணக்கிடைக்காத பொருளையொன்றை வாங்கி , உள்ளூரில் விற்றுக்காசு பார்க்க உத்தேசித்திருந்தான் கவி. காணக்கிடைக்காத தேசமெது.?  அங்கே உள்ளூரில் போனியாகும் உயர்தர பொருளெது? அப்பொருளை அங்கே சென்று வாங்கி வர ஆகும் செலவையும் , அதன் மீது வைத்துவிற்கும் குறைந்தபட்ச லாபத்தையும் மீறி அந்தப்பொருள் விலை போகுமா? போனால் லாபம் உண்டு. விலைபோகாவிட்டால் வாங்கிய விலைக்கேனும் விற்று நஷ்டமில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். அட அடக்கவிலைக்கேனும் யாரும் வாங்கிட மறுத்தால் என்ன செய்ய? நஷ்டம் தான்.   அதில் குறைந்தபட்ச நஷ்டத்தை நாம் எப்படி சமாளிப்பது? இருக்கிற பணத்துக்கெல்லாம் பொருளை வாங்கி விட்டால் நஷ்டம் ஏற்படும்போது “புவ்வா”விற்கு என்ன செய்வது? குழம்பிப் போனான் கவி. சரி , தெரிந்த நண்பர்களிடம் கேட்கலாமென்று முடிவு செய்தான். ஒருத்தன் சொன்னான். “ மாப்ளே , இன்னிக்கு லெவல்ல தனியா தொழில் தொடங்கி ஆறே மாசத்துல அம்பானி ஆனவன் ஆயிரக்கணக்கில…..தெம்பா செய்டா” இன்னொருத்தன் சொன்னான்…. ” டேய் ..இன்னிக்கெல்லாம் , வேலைக்கு போய் சோத்துக்கு ரெடி பண்ணிக்கிட்டு பார்ட்-டைமா ஏதாச்சும் கடை க

மாரியாத்தா நோம்பி , பகுதி 1

முந்தாநேத்து , எங்கூருக்கு போன்ல பேசீட்டிருக்கும் போது வாற வைகாசி மாசம் , நோம்பி சாட்டுவாங்க போலிருக்குடான்னு எங்கம்மா சொல்லுச்சிங்களா? உடனே தான் காவகத்துக்கு வந்திச்சி , நாம எப்பவோ ஒருக்கா "மாரியாத்தா" நோம்பி பத்தி எழுத ஆரம்பிச்சி பாதீலேயே நிறுத்திப்போட்டது.. அதை இப்ப தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...தா.....................................................மததிற்கு ( ஆமாம் , மொத பதுதிய எழுதுன நாள் அக்டோபர் 2008)  மன்னித்தருள்க. இப்பதிவு முன்பே எழுதிய பதிவின் மீளாக்கமே , தொடர்ச்சியினை வரும் நாட்களில் படித்து மகிழ்க / திட்டுக / வசவுக/ ரசிக்க இன்னபல..இன்னபல. நன்றி  ( மீள்பதிவிற்கான காரணம் , தற்பொழுது வலைப்பூ முகவரி மாற்றப்பட்டுள்ளது.)  மாரியாத்தா சாமி , அலங்காரத்தோட!- புகைப்படம் நன்றி : இளவஞ்சி! எங்கூரு மாரியாத்தா கோயிலு ஊருக்குத் தெக்கால எங்கூட்டுக்கு பொறகால  இருக்குதுங்க. நடுவால மாரியாத்தா கோயிலு , கெழவறம் ப்ளேக்கி மாரியாத்தா கோயிலு , மேவறம் மாகாளியாத்தா கோயிலு….மாரியாத்தா கோயுலுக்கும் மாகாளியாத்தா கோயுலுக்கும் நடுவால வீரமாச்சியாத்தா கோயுலு….. வருசமொருக்கா வைகாசி