Skip to main content

Posts

Showing posts from November, 2010

சீமானுக்குப் பொருந்தாத ஐபிசி 124ஏ பிரிவு.

புகழ்பெற்ற எழுத்தாளரும் , மனித உரிமை ஆர்வலருமான திருமதி.அருந்ததி ராய் அவர்கள் "காஷ்மீர்" எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியான இருந்ததில்லை என்று புதுதில்லி ஆய்வரங்கம் ஒன்றில் சொன்னதும் , ஹிலானி அவர்கள் "சுதந்திரமே தீர்வு" என்று சொன்னதும் பஜ்ரங்தள் கோஷ்டிகளாலும், வட இந்திய செய்திச்சேனல் மாபியாக்களாலும் பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டது தெரிந்தமையே. பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார். அது குறித்தான செய்தி பின்வருமாறு. அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம் டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட